பொழுதுபோக்கு

ஓடிடிக்கு முன்னரே டிவியில் ஒளிபரப்பாகப் போகும் லால் சலாம் – அதுவும் எப்ப தெரியுமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் கேமியோ ரோலில் நடித்து வெளிவந்த லால் சலாம் திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு முன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

வை ராஜா வை படத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய ஐஸ்வர்யா சுமார் 8 ஆண்டுகள் கழித்து கம்பேக் கொடுக்கும் விதமாக இயக்கிய திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, தன்யா பாலகிருஷ்ணன், செந்தில், தங்கதுரை என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோர் ரோலில் நடித்திருந்தார்.

அதுவும் பாட்ஷா படத்துக்கு பின்னர் அவர் மொய்தீன் பாய் என்கிற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகளவில் இருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த லால் சலாம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இப்படம் மொத்தமே ரூ.20 முதல் ரூ.25 கோடி தான் வசூலித்து இருந்தது.

லால் சலாம் படத்தின் தோல்விக்கு பின்னர் பேட்டியளித்த ஐஸ்வர்யா அதன் ஹார்ட் டிஸ்க் தொலைந்த விஷயத்தை சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். சுமார் 21 நாள் ஷூட் பண்ணிய காட்சிகள் அந்த ஹார்ட் டிஸ்க்கில் இருந்ததாக அவர் கூறினார்.

பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகி 28 நாட்களிலேயே ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடும். ஆனால் லால் சலாம் படம் திரைக்கு வந்து 2 மாதங்கள் ஆகியும், அப்படத்தை ஓடிடியில் வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அப்படம் ஓடிடிக்கு முன்னரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி லால் சலாம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளதாம். அதற்கு மறுதினம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content