பொழுதுபோக்கு

வேட்டைக்கு தயாரான “குபேரா”… ரிலீஸ் தேதி குறிச்சிட்டாங்க…

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வரவேற்புக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் தனுஷ் ஒப்பந்தமாகி இருந்தார்.

அதன்படி அவரது கைவசம் குபேரா, இட்லி கடை போன்ற படங்கள் இருக்கிறது. அதோடு இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் தான் நடிக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த சூழலில் இப்போது மீண்டும் கல்லா கட்ட தயாராகிறார் தனுஷ்.

சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் தான் குபேரா. இந்த படத்தில் நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி குபேரா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறார்களாம். இதற்கான பணிகள்தான் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.

See also  பிக் பாஸ் ரஞ்சித் இப்படிப்பட்டவரா? உண்மையை உடைத்த மனைவி...

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content