குபேரா ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் குபேரா உருவாகி இருக்கிறது. வரும் ஜூன் 20ம் தேதி இப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது.
அதனால் படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி இருந்தது.
போய் வா நண்பா என தனுஷ் பாடி ஆடும் இந்த பாடல் அனைவரையும் ரசிக்க வைத்தது. அதை அடுத்து இதை முழுவதுமாக கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
வரும் ஏப்ரல் 20ம் தேதி பாடல் வெளியாகிறது. அதை அடுத்து 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஒரு பாடலாக ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளதாம்.
அதை தொடர்ந்து மிகப்பெரிய இசை வெளியீட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பான் இந்தியா படம் என்பதால் தனுஷ் ஒவ்வொரு மாநிலமாக சென்று படத்தை ப்ரோமோஷன் செய்ய இருக்கிறாராம்.
சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் படத்திற்காக விக்ரம் பயங்கர பிரமோஷன் செய்திருந்தார். அதே அளவுக்கு தனுஷும் இறங்கி அசத்துவார் என்கின்றனர்.
அதைத்தொடர்ந்து இட்லி கடை, பாலிவுட்டில் உருவாகி வரும் படம் என இந்த வருடம் அவருக்கு அடுத்தடுத்த ரிலீஸ் காத்திருக்கிறது. ஆக இந்த வருடம் தனுசு ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டம்.