“அபுதாபியில் என்ன இல்லை?” – கலை மற்றும் உணவுகளுடன் கிருத்தி ஷெட்டியின் கலக்கல் ட்ரிப்!
தென்னிந்திய சினிமா வில் ராசிகளுக்கு மிகவும் பிடித்த கதாநாயகி கனவுக்கன்னி கிருத்தி ஷெட்டி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் (Abu Dhabi) சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் கழித்த தருணங்களை உற்சாகத்துடன் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவர்தான் வலைத்தளத்தில் “அபுதாபியில் செய்வதற்கு எதுவுமே இல்லை என்று யார் சொன்னது?” எனக்கேட்டு, அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் அழகையும் தனது புகைப்படங்கள் மூலம் நிரூபித்துள்ளார்.



அபுதாபியின் புகழ்பெற்ற கலைக்கூடங்கள் மற்றும் கலாச்சார மையங்களுக்குச் சென்று, அங்கிருந்த கலைநயமிக்க படைப்புகளைக் கண்டு வியந்துள்ளார்.





“மனம் நிறைந்த வரை உண்டேன்” (Ate to my heart’s content) எனக் குறிப்பிடும் அளவிற்கு, அபுதாபியின் பாரம்பரிய உணவுகளை ருசித்துள்ளார்.







