பொழுதுபோக்கு

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இலங்கைக்கு வந்த KPY பிரபலங்கள்….

விஜய் தொலைக்காட்சின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் தமிழர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

புங்குடுதீவின் மலரும் நினைவுகள் Dinner night 2023 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் கலகலப்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இருவரும் அதில் பங்கேற்கவுள்ளனர்.

குறிப்பாக புங்குடுதீவு மக்கனை ஒன்றிணைத்து அவர்களின் பழைய மலரும் நினைவுகளை மீட்டு சந்தோசத்தை கூட்டுகின்ற ஒரு நிகழ்வாகவே இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், அதில் தமிழர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிகள் இலக்கம் 12 பூனாரி லேன் கொக்குவில் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்