வசூல் வேட்டை நடத்தியதா “கிங்ஸ்டன்” ??

இந்த வாரம் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கிங்ஸ்டன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை கமல் பிரகாஷ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சிலர் பட நாயகி திவ்ய பாரதி நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் ஹீரோ ஜிவி பிரகாஷே இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தார். இது ஜிவி பிரகாஷின் 25வது படமாகும்.
கிங்ஸ்டன் திரைப்படம் கடலில் நடக்கும் ஒரு ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட படமாகும். இப்படத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை. முதல் நாளில் ரூ.90 லட்சம் மட்டுமே வசூலித்திருந்த இப்படம் நேற்று விடுமுறை தினம் என்பதால் மேலும் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாம் நாளிலும் இப்படம் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் கிங்ஸ்டன் படத்தின் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.