விளையாட்டு

சங்ககாராவின் மாபெரும் சாதனையை உடைத்த கிங் கோலி

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சென்சூரியன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா டீ எல்கர் 185, மார்கோ யான்சென் 84* ரன்கள் எடுத்த உதவியுடன் 408 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களை சாய்த்தார். இறுதியில் 163 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய இந்தியா போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மீண்டும் சுமாராக விளையாடி 131 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனி ஒருவனாக 76 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 4 விக்கெட்களை சாய்த்தார்.

இந்த தோல்வியால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை இந்தியா நழுவி விட்டது.

முன்னதாக இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் எடுத்த விராட் கோலி 2வது இன்னிங்ஸில் மற்ற அனைத்து இந்திய வீரர்களும் சேர்ந்து 47 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனி ஒருவனாக 76 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். அந்த வகையில் இந்த போட்டியில் எடுத்த 114 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் விராட் கோலி 36 இன்னிங்ஸில் 2048 ரன்கள் எடுத்துள்ளார்.

அதாவது 2023 காலண்டர் வருடத்தில் நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி 36 இன்னிங்ஸில் 2048 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் மட்டும் அவர் 765 ரன்கள் குவித்து அவர் உலக சாதனை படைத்தது மறக்க முடியாது. இதே போலவே கடந்த 2012, 2014, 2016, 2017, 2018, 2019, 2023 ஆகிய 7 வெவ்வேறு காலண்டர் வருடங்களில் விராட் கோலி தலா 2000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு காலண்டர் வருடத்தில் 2000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற குமார் சங்ககாராவின் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி யாராலும் எளிதில் தொட முடியாத மாபெரும் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. விராட் கோலி : 7*

2. குமார் சங்ககாரா : 6

3. சச்சின் டெண்டுல்கர் : 5

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ