ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்குமாறு கிம் ஜாங்-உன் உத்தரவு
ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்குமாறு வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது அமெரிக்கா மற்றும் தென்கொரியா வருடாந்தம் நடத்தும் இராணுவப் பயிற்சிக்கு பதிலடியாக வடகொரிய தலைவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமீபத்தில், வட கொரியத் தலைவர் நாட்டின் ஏவுகணை ஏவுதளங்களையும், கவச வாகனங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை உற்பத்தி செய்யும் பெரிய ஆயுத தொழிற்சாலைகளையும் பார்வையிட்டார்.
அங்கு ஆயுதங்களை பெருமளவில் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
“இராணுவ தயார்நிலையின் தர நிலைகள் வெடிமருந்துத் துறையின் வளர்ச்சியைப் பொறுத்தது,
மேலும் எங்கள் இராணுவத்தின் இராணுவத் தயார்நிலையை விரைவுபடுத்துவதில் தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.” என வட கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக ஆகஸ்ட் 21 மற்றும் 31 க்கு இடையில் Ulchi Freedom Guardian கோடைகால இராணுவ பயிற்சியை நடத்துவதாக தென் கொரியாவும் அமெரிக்காவும் அறிவித்தன.