கமலுடன் மீண்டும் இணையும் மக்கள் செல்வன்… உறுதியான அறிவிப்பு
உலக நாயகன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தனது 233வது படத்தை ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், KH 233 படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
விதவிதமான துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் கமல், KH 233ல் ஆக்ஷன் ட்ரீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் கமலுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்து இதுவரை அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் செப்டம்பர் இறுதிக்குள் KH 233 படப்பிடிப்பை தொடங்க ரெடியாகிவிட்டார் வினோத்.
இதனால், இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து அபிஸியல் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், KH 233 படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. விஜய் சேதுபதி ஹீரோவாகவும், கமல் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டன.

ஆனால், ஹீரோ கமல் தான் எனவும், விஜய் சேதுபதிக்கு லீடிங் ரோல் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. KH 233 படத்திற்காக விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
அதேநேரம், இன்னொரு முக்கியமான கேரக்டரில் யோகி பாபு நடிக்கவிருப்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதன்மூலம் கமலுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் யோகி பாபு. கமல், விஜய் சேதுபதி, யோகி பாபு என லீடிங் கேரக்டர்கள் உறுதியாகிவிட்டாலும், மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்களை வினோத் சீக்ரெட்டாக வைத்துள்ளாராம்.
அதேபோல், KH 233 விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்தப் படம் அஜித்தின் துணிவு போல, பக்கா ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






