ரன்பீர் கபூருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

தமிழில் கடைசியாக ரகு தாத்தா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அதை அடுத்து ஹிந்தியில் அவர் நடித்த தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படம் வெளியானது.
இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், பின்னர் அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அக்கா என்ற வெப்சீரியலில் நடித்த கீர்த்தி சுரேஷ், அடுத்து மீண்டும் ஹிந்தியில் காமெடி கலந்த ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில்.
தற்போது அவர் அந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறதாம்.
(Visited 15 times, 1 visits today)