கீர்த்தி சுரேஸின் கருத்துக்கு எதிராக பேசிய விஜய்..!
AI தொழில்நுட்பம் குறித்து கீர்த்தி சுரேஷ் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில், விஜய் ஆன்டனி AI தொழில்நுட்பம் நன்மை என்று கூறியுள்ளார்.
ரிவால்வர் ரீட்டா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ்,
“இப்போது இருக்கின்ற பெரிய பிரச்சனை AI தொழில்நுட்பம். இது மனிதர்கள் கண்டுபிடித்தது. ஆனால் அது நம்மை மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று ஆச்சரியமாக உள்ளது. அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு.

சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் ஆடையை பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது அது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று.
AI ஒரு எரிச்சலூட்டும் விதமாகத் தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் பேசியது தொடர்பாக நடிகர் விஜய் ஆன்டனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,
“வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளது. மனிதனின் உழைப்பை எளிமைப்படுத்தும் ஒரு தளமாக தான் தற்போதைய AI விளங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.






