கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம்… அதிர்ச்சியில் குடும்பம்

தமிழ் சினிமாவில் கவுண்ட்டர்களின் மன்னன் என அழைக்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. அதுவும் செந்தில் – கவுண்டமணி கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை.
1970 களில் இருந்து தனது திரை வாழ்க்கையை கவுண்டமணி துவங்கினார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார்.
சாந்தி என்பவரை நடிகர் கவுண்டமணி திருமணம் செய்துகொண்டார். கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது வயது 67.
(Visited 1 times, 1 visits today)