கவினின் மாஸ்க் பட வெளியீட்டுத் திகதி அறிவிப்பு
கவின் நடிப்பில் மாஸ்க் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் வழங்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கியுள்ளார்.
நாயகியாக ருஹானி ஷர்மாவும் பிரதான கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மாஸ்க் திரைப்படம் உலகம் முழுவது நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)





