கர்ப்பமாக இருப்பதை அறிவித்த கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் ஜோடி
தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகை கத்ரீனா கைஃப்.
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் ஜோடி தங்கள் கர்ப்பம் குறித்த செய்திகளை சீக்ரெட்டாக வைத்திருந்த நிலையில், அண்மையில் கத்ரீனாவின் போட்டோ ஒன்று வெளியாகி வைரலானது.
அதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அவரே தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருக்கிறார்.
கத்ரீனா தனது மகப்பேறு போட்டோஷூட் மூலம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை உறுதி செய்திருக்கிறார். சமூக ஊடக பயனர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி, ‘அவருக்காக மிகவும் மகிழ்ச்சி, வாழ்த்துகள்’ என்று எழுதியுள்ளனர்.
கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் 2019-ல் முதல் முறையாக சந்தித்தனர். மெதுவாக, அவர்களின் நட்பு வலுப்பெற்று, காலப்போக்கில் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமானார்கள்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் டிசம்பர் 9, 2021 அன்று ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் திருமணம் செய்து கொண்டனர்.






