கங்குவா படத்தில் ட்ரோல் செய்யப்பட்ட காட்சிகள் அதிரடியாக நீக்கம்… இனியாவது ஓடுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்த கங்குவா படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
முதல் அரை மணி நேரம் சரியில்லை, படத்தில் சத்தம் அதிகமாக இருக்கிறது எனவும் கடுமையான ட்ரோல்கள் வந்தது. நெகடிவ் விமர்சனங்களால் படத்தின் வசூல் கடுமையாக பாதித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது கங்குவா படத்தின் முதல் பாதியில் இருந்து பல காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறதாம். நிகழ்காலத்தில் நடப்பது போன்ற காட்சிகளிலில் 12 நிமிடம் நீக்கப்பட்டு இருக்கிறது.
சத்தம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதையும் சரி செய்து தற்போது மீண்டும் படம் ரீசென்சார் செய்யப்பட்டு தியேட்டர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த மாற்றங்களால் வசூல் அதிகரிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
(Visited 12 times, 1 visits today)