கங்குவா 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கங்குவா படம் இந்த ஆண்டு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான இப்படத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பாட்னி ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தில் சத்தம் அதிகமாக இருக்கிறது, அதுவே சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதே பெரும்பான்மையான மக்களின் விமர்சனமாக இருக்கிறது.
இந்த நிலையில், கங்குவா படம் தமிழ்நாட்டில் 3 நாட்களில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
(Visited 28 times, 1 visits today)





