பொழுதுபோக்கு

கங்குவா முதல் நாள் வசூல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

நேற்று உலக அளவில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழு வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி தற்பொழுது வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் கங்குவா. முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு இரு கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இன்று தனது இரண்டாவது நாளில் பயணித்து வரும் கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களோடு பயணித்து வருகின்றது.

இந்த நிலையில் இப்போது வெளியாகி உள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம் உலக அளவில் சுமார் 58.62 கோடி வசூல் செய்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

நிச்சயம் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் நாளையே நுழைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் இசையில் சொல்லப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாளை முதல் ஒலிகள் சரியான விதத்தில் கேட்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஞானவேல் ராஜா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

See also  கங்குவா ஓய்வதற்கு முன் அடுத்த பட அப்டேட்... சிக்கியது தலை?

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content