பெண்கள் குறித்து ஆவேசத்தை வெளிப்படுத்திய கங்கனா
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தற்போது ‘சந்திரமுகி 2’, ‘எமர்ஜென்சி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக உள்ள கங்கனா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.

கங்கனா ரணாவத் இமாசலப்பிரதேசத்தில் பஷிநாத் கோவிலில் பெண் ஒருவர் இரவு ஆடைகளை அணிந்து கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ததாக ஒரு நபர் இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அந்த பெண்ணை விமர்சித்திருந்தார்.

அந்த பதிவை பகிர்ந்த நடிகை கங்கனா அந்த பெண்கள் குறித்து தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி தனக்கு நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.






