குத்துப் பாட்டுக்கு இறங்கி குத்தாட்டம் போட்ட நம்ம ஸ்ரேயா….
கட்டுக்கோப்பான உடலாலும், தனித்துவமான அழகாலும், யதார்த்தமான நடிப்பாலும் கட்டிப்போட்டவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.
தமிழில் இவர் பெரிய தலைகளுடன் சேர்ந்து நடித்திருந்தார். பீக்கில் இருக்கும் போதே திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார்.
ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் இன்றும் குழந்தைத்தனமாக சுற்றி வருகின்றார். மேலும் தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றார்.

இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதை விட, ஐட்டம் டாஸ் ஆடுவது தான் பேமசாக உள்ளது.
தமன்னா முதல் சமந்தா வரை அனைவரும் ஐட்டம் டான்ஸால் அதிகம் கவனம் பெற்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரண் நான் வயலன்ஸ் எனும் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் விடியோ விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் நான் வயலன்ஸ் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

ஏகே பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ ஸ்ரிஷ், யோகி பாபு, அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
நடிகை ஸ்ரேயா கடைசியாக மிராய் எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






