கமல்ஹாசனின் வீட்டில் திடீர் மரணம் – ஓடி வந்த ஸ்ருதி மற்றும் அக்ஷரா
 
																																		நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் மாமா வாசு என்பவர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் தாத்தா வாசுவின் உடலை பார்த்து கண்கலங்கிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
பல நாட்களாக மீடியா வெளிச்சம் இல்லாமல் இருந்த அக்ஷரா ஹாசனை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வாசு தனது 92வது வயதில் காலமானார். கொடைக்கானலில் வசித்து வந்த அவர் அங்கே உயிரிழந்த நிலையில், அவரது உடல் அஞ்சலிக்காக மக்கள் நீதி மய்யத்தில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
ஸ்ருதிஹாசன் சலார் படத்தில் நடித்து பிசியான நிலையில், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் வீடியோ பாடலிலும் நடித்திருந்தார். அடுத்ததாக கூலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால், அக்ஷரா ஹாசன் கடைசியாக 2022ம் ஆண்டு வெளியான “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” படத்தில் நடித்த அக்ஷரா ஹாசன் அதன் பின்னர் லைம் லைட்டில் இல்லாத நிலையில், தற்போது தனது தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார்.
அருண் விஜய், விஜய் ஆண்டனியுடன் இணைந்து அவர் நடித்த அக்னி சிறகுகள் படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
        



 
                         
                            
