பொழுதுபோக்கு

இங்க இவ்வளோ வேல இருக்கு… ஆனால் ஆண்டவர் பறந்தார் அமெரிக்காவுக்கு

விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் படங்கள் வெளியாகாத நிலையில், இந்த வருடம் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் அடுத்தாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தங் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.

எப்போதுமே கமலின் படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திற்கும் அபரிவிதமான வித்தியாசம் இருக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய கமல் தயங்க மாட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்கள் கமலின் படங்கள் மூலமாகத்தான் கிடைத்திருக்கிறது.

இந்த சூழலில் தங் லைஃப் படத்திற்கு நீண்ட தாடி மற்றும் மீசையுடன் கமல் நடிக்க வேண்டுமாம். இப்படத்தின் டைட்டில் வீடியோ இல்லையே அவரது கெட்டப் வித்தியாசமாக இருந்தது.

இந்நிலையில் தங் லைஃப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இதை அடுத்து திடீரென கமல் அமெரிக்கா சென்றிருக்கிறாராம்.

அதாவது கமல் கதர் ஆடையை மேம்படுத்தும் வகையில் தொழில் செய்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கதர் ஆடையை பற்றி பல விஷயங்களைப் பேசி இருக்கிறார். இதை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில் கமல் இறங்கி இருக்கிறாராம். அதோடு சினிமாவிலும் இன்னும் நிறைய படிக்க வேண்டுமாம்.

கமல் இன்னும் இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தான் இருக்கப் போகிறாராம். சினிமா மீது உள்ள தீராத ஆசையால் தன் சம்பாதித்த பணம் முழுவதையும் சினிமாவில் முதலீடு செய்து வருகிறார். அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல ஆச்சரியங்கள் காத்திருக்க உள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content