புரோமோஷனுக்காக பணத்தை வாரி இறைக்கும் கல்கி டீம்..
இந்திய சினிமாவே தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பது கல்கி 2898 ஏ.டி தான். படத்தின் அறிவிப்பில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் வெளியாகவுள்ள தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூற, நவீன எல்.இ.டி திரைகள் பொருத்தப்பட்ட 13 மினி லாரிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இதனை நாடு முழுவதும் பயணப்படச் செய்து மக்கள் மத்தியில் ஒளிபரப்பாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் புரோமோஷனுக்காக பணத்தை வாரி இறைத்து வருகின்றது. படம் எந்த அளவுக்கு வசூல் குவிக்கும் என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.






