ஏப்.03 திரைக்கு வருகிறது ‘காளிதாஸ் 2′
பரத்தின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட ‘காளிதாஸ்’திரைபடத்தின் அடுத்த பாகமான ‘காளிதாஸ் 2’ எதிர்வரும் 3 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய செந்தில் 2ஆம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.
இதில், பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘பூவே உனக்காக’ சங்கீதா, கிஷோர், சுரேஷ் மேனன், பவானி, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் பைவ் ஸ்டார் கே.செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் திகதிய படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 3ஆம் திகதி வெளியாக இருக்கிறது.





