பொழுதுபோக்கு

என்டிஆரின் ‘தேவரா’ பட சைஃப் அலிகான் லுக் வெளியீடு!

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் பிறந்த நாளையொட்டி ‘தேவரா’ படத்தில் நடிக்கும் அவரின் கதாபாத்திரத் தோற்றம் மற்றும் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த ஏப்ரல் 2-ம் திகதி ஹைதராபாத்தில் தொடங்கின. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவரது பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரை தாடி மற்றும் நீளமான முடியுடன் புதிய கெட்டப்பில் கவனம் பெறுகிறார்.

மேலும் அவரது கதாபாத்திரத்துக்கு ‘பைரா’ என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் திகதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content