ஜாய் கிரிசில்டாவின் விவாகரத்துக்கு காரணமே ரங்கராஜ் தான்…
ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா பற்றிய சர்ச்சைகள் நாளுக்கு நாள் பல புதி தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
இதை தெரிந்துகொள்வதில் மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது.
ஜாய் கிரிசில்டாவை, மாதம்பட்டி திருமணம் செய்து கொண்டது, குழந்தை பிறந்தது, வீடியோ, செட், மற்றும் ரங்கராஜனின் முதல் மனைவி வெளியிட்ட கடிதம் என நாளுக்கு நாள் இவர்களது விடயங்கள் பெரிதாகிக்கொண்டே செல்கின்றது.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், ஜாய் தன்னுடைய முதல் கணவர் ஜெ ஜெ ஃபெட்ரிக்கை விவாகரத்து செய்ய காரணம் ரங்கராஜ் தான் என கூறி அதிர வைத்துள்ளார்.
தங்களுக்குள் இருந்த சிறிய கருத்து வேறுபாட்டை விவாகரத்து வரை கொண்டு செல்ல வைத்தார். உன்னையும், உன் பிள்ளையையும் நான் பார்த்து கொள்கிறேன் என கூறினார் இதன் பிறகே நான் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் முதல் கணவருக்கு பிறந்த ஜாய் கிரிசில்டாவின் மகன் ஜேடன் குறித்து பிரபல நடிகை சார்மிளா பேசியுள்ளார். ஜாய் கிரிசில்டாவின் செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ, முதல் கணவருடைய குழந்தைதான்.
இப்படி பட்ட ஒரு சர்ச்சையை சந்திக்கும் போது அந்த பையனை நல்ல மனநிலைமையோடு ஜாய் கிரிசில்டா வளர்க்கிறாரா? என தோன்றுகிறது. ஒரு தாயாக அந்த குழந்தைக்கு அவர் துரோகம் செய்துள்ளார். அந்த பையனுக்கு அப்பா பாசம் கிடைக்காமலேயே போய் விட்டது. ரங்கராஜை அந்த குழந்தை இதுவரை அப்பா என்று தான் அழைத்தேன் என்பதை அவரே ஒரு பேட்டியில் கூட கூறியுள்ளார்.
இப்போது ரங்கராஜ் மூலம் ஜாய்க்கு மற்றொரு குழந்தை பிறந்துள்ளது. ரங்கராஜ் ஒருவேளை ஜாய்யை ஏற்றுக்கொண்டாலும், முதல் கணவருக்கு பிறந்த மகனை ரங்கராஜ் மதிப்பாரா? இன்னொரு பக்கம் ஸ்ருதி-ரங்கராஜுக்கு பிறந்த மகன்களும் நிம்மதியாக இருப்பார்களா. பெரியவர்கள் செய்யும் தவறுகளால் பாவம் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்க படுகிறார்கள் என கூறி இருக்கிறார் சார்மிளா.






