“தக் லைஃப்” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் தக் லைஃப் படம் உருவாகி இருக்கிறது. வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
ஏ. ஆர். ரகுமான் இசையில் ஜிங்குச்சா என அப்பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது. அதிலும் கல்யாண விழாவில் இளம் பெண்களும் ஆண்களும் ஆடுவது போல் பாடல் உள்ளது.
அதிலும் சிம்புவின் ஆட்டம் ஒரு பக்கம் இறுதியில் ஆண்டவரின் ஆட்டம் ஒரு பக்கம் என பாடல் முழு வைப் தான். இது தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில் இனி கல்யாண வீடுகளில் இப்பாடலை அடிக்கடி கேட்க முடியும்.
(Visited 1 times, 1 visits today)