கைமாறப்பட்டது பெரிய தொகை அட்வான்ஸ்… மீண்டும் ஜோதிகா
நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘உடன்பிறப்பு’.
அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜோதிகாவின் கணவராக சமுத்திரக்கனி நடித்திருப்பார்.
இப்படம் தன்னுடைய கேரியரில் மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என, நடிகை ஜோதிகா பலமுறை கூறி இருக்கிறார்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான் ஜோதிகா தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ரா சரவணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சு வார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ’உடன்பிறப்பே 2’ கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இயக்குனர் ரா சரவணனுக்கு ஒரு பெரிய தொகை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே ஜோதிகாவை மீண்டும் கிராமத்து மனம் கமழும் கதாபாத்திரத்தில் பார்க்கப்போவது உறுதியாகியுள்ளது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் இருக்கும் என்றும், முதுமையிலும் அண்ணன் – தங்கை பாசம் மாறாது என்கிற கான்செப்டில் இப்படம் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






