ரவி மோகன் எடுக்க காத்திருக்கும் புதிய அவதாரம்..

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவி மோகன், விரைவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் கசிந்துள்ளது.
ரவி மோகன் தற்போது தமிழில் பிசியான ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகி வருகின்றன.
இதுதவிர ரவி மோகன் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, இயக்குனராகும் படத்தின் பணிகளை தொடங்க உள்ளாராம் ரவி மோகன். இவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முன்னர் நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அப்போதில் இருந்தே ஒரு இயக்குனராகும் கனவோடு இருந்துள்ளார் ரவி மோகன். அந்த கனவு தற்போது நனவாக உள்ளது. அவர் இயக்க உள்ள முதல் படத்தில் நடிகர் யோகிபாபு தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.