இந்தியா தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு பரிந்துரை!

தமிழக அரசியலில் இரும்பு பெண்ணாகக் கருதப்பட்ட முன்னாள் முதல்வர் அமரர் ஜெயலலிதாவுக்கு Jayalalithaa பாரத ரத்னா Bharat Ratna விருது வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. AIADMK நாடாளுமன்ற உறுப்பினர் தனபால் Dhanapal மேற்படி கோரிக்கையை மாநிலங்களவையில் Rajya Sabha முன்வைத்துள்ளார்.

‘‘ தமிழ்நாட்டின் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

எனவே, அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்படுதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் ஒருங்கே கொண்ட ஒரு தலைவராக மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவராக அவர் திகழ்ந்தார்.” – எனவும் அதிகமு எம்.பி. சுட்டிக்காட்டினார்.

தனபால் பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசிடம் நீங்கள் கேட்கலாமே என கூறினார்.

அதற்கு, மத்திய அரசுக்கு கோரிக்கையாகவே இதை தெரிவிக்கிறேன் என தனபால் பதிலளித்தார்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் அதிகமுவினரால் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.

 

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!