ஜப்பானில் வேலை வாய்ப்பு! பரீட்சை திகதி அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகளில் அடிப்படை மொழி சோதனைகள், நர்சிங் கேர் தொழிலாளர்கள், உணவு சேவை தொழில் மற்றும் விவசாயம் ஆகியவை அடங்கும்.
விண்ணப்பதாரர்கள் ப்ரோமெட்ரிக் http://ac.prometric-jp.com/testlist/ssw/index.html இணையதளம் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)





