‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச்… வெளியானது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
விஜயின் சினிமா வாழ்க்கையில் இறுதி அத்தியாயம் தான் ஜனநாயகன். இதை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
அந்த வகையில், ஜனநாயகனின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றன.
இப்போது ஜனநாயகன் படத்திலிருந்து மிக முக்கிய அறிவிப்பு வெளியாகி. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆடியோ லாஞ்ச் தான் அந்த செய்தி.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட பதிவில்,
வருகிற டிசம்பர் 27ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மலேசியாவைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் பேசியுள்ளனர். மேலும் விஜய்யின் திரை பயணமும், ஜனநாயகன் பட பாடலும் இடம்பெற்றுள்ளன.





