பொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69-வது திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. எச்.வினோத் ஏற்கனவே ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

தனது படங்களின் மூலம் எதார்த்தமான கதைக்களங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை கையாளுவதில் பெயர் பெற்றவர் என்பதால் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் அது போன்ற ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஜய் இந்த படத்திற்கு பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

‘ஜனநாயகன்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து தற்போது பூஜா ஹெக்டேவும் படத்தின் படப்பிடிப்புகளை முடித்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக அறிவித்திருக்கிறார்.

‘ஜனநாயகன்’ படத்தில் தனது போர்ஷன் முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.

வரும் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ அல்லது வேறு ஏதாவது அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்