“ஜனநாயகன்” சாட்லைட் உரிமையை தட்டித் தூக்கிய சேனல் எது தெரியுமா?

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது.
இந்த வருடம் வெளியாக வேண்டிய இப்படம் சில காரணங்களால் அடுத்த வருட பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது.
தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் இரு வாரங்களில் முடிவடையும் என தெரிகிறது.
இந்த சூழலில் ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
எப்போதுமே விஜய் படத்தை வாங்குவதற்கு நீ நான் என தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போடும். அதில் சன் டிவி தான் வெற்றி பெறும்.
அதன்படி தற்போது ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி 55 கோடிகளை கொடுத்து தட்டி தூக்கி இருக்கிறது. இதனால் சன் டிவியின் டிஆர்பி உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏற்கனவே இதன் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் 121 கோடிகளை கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்த சூழலில் சாட்டிலைட் உரிமையும் அமோகமாக விற்பனையாகியுள்ளது.
இப்படி ரிலீசுக்கு முன்பு தயாரிப்பாளர் கல்லாகட்டி விட்டார். அதை அடுத்து இன்னும் அடுத்தடுத்த வியாபாரமும் லாபகரமாகத் தான் இருக்கிறதாம்.