இழுபறியில் “ஜனநாயகன்” : திரைக்கு வருகிறது “தெறி”
தளபதி விஜய் நடித்து பெரும் வசூல் வேட்டை நடத்திய ‘தெறி’ படத்தைப் பொங்கலுக்கு மறுவெளியீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் எப்போது வெளிவரும் என்பது இழுபறி நிலையில் உள்ளது.
குறித்த படத்தைப் பொங்கலுக்கு வெளியிடும் முயற்சியில், படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், குறித்த படம் வெளியாகுமா, இல்லையா என்ற நிலையில், விஜய் நடித்து வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களை “ர Pரிலிஸ்” செய்ய சில தயாரிப்பாளர்கள் முயன்று வந்தனர்.
இந்நிலையில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்தைப் பொங்கலுக்கு மறுவெளியீடு (ஜனவரி 14) செய்வதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.
அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன்உள்பட பலர் நடித்துள்ளனர்.





