பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் விழா ரத்து… அதிர்ச்சியில் ரசிகர்கள்…
ஜெயிலர் படம் ரிலிஸ் திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ஆடியோ லான்ஜ்க்கு டிக்கட் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதிர்ச்சி செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
ஜெயிலர் படம் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. எனவே நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் ரஜினிக்கு ஒரு கம்பேக் கொடுத்து தானும் மீண்டு வருவார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. இதில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் படக்குழுவினர் பங்கேற்கவிருக்கின்றனர்.
குறிப்பாக ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு எந்த மாதிரியாக இருக்கும் என்பதை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருக்கின்றனர். அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ரசிகர்களுக்கு இலவசமாக 1000 பாஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் காவலா பாடலின் தெலுங்கு வெர்ஷனான காவாலி பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக காவாலி பாடலுடைய வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுகிறது என்றும்; மாறாக பாடல் மட்டும் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.