ஜெய்லர் 2 – அந்த சூப்பர் ஸ்டார் நடிக்க மாட்டாரா? கிடைத்தது கால் சீட்

ஜெய்லர் முதல் பாகத்தில் மேத்யூ கதாபாத்திரத்தில் மோகன்லாலும், நரசிம்மன் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இவர்களது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. படத்திற்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் இவர்கள் இருவருக்கும் முக்கிய பங்கு கொடுக்குமாறு ஸ்கிரிப்ட் எழுத சொல்லி இருந்தார் சூப்பர் ஸ்டார்.
முதல் பாகத்தை விட அடுத்த பாகத்தில் நீண்ட நேரம் அவர்கள் திரையில் தோன்றுமாறு கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே சிவராஜ் குமாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் அமெரிக்கா சென்று ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார். அவருக்கு புற்றுநோய் இருப்பதால் இந்த படத்தில் அவர் நடிப்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கு நல்ல செய்தி கிடைத்துவிட்டது.
சிவராஜ்குமார் ஜெய்லர் 2 படத்திற்கு 20 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். மே மாதத்திற்குள் தன்னுடைய காட்சிகளை எல்லாம் முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் அவரும் பார்ட் 2வில் நடிப்பது உறுதியாகி உள்ளது.