சுந்தர்.சி மற்றும் விஷால் ஆகியோர் மீண்டும் ஒரு திரைப்படத்திற்க்கு இணைய உள்ளதாக தகவல்.
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/117050950.webp)
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு பின் விஷால், சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த இப்படம் வசூலில் சாதனை படைத்தது.
விஷால் – சுந்தர்.சி கூட்டணி இதற்கு முன் பல படங்களில் இணைந்திருந்தாலும் மதகஜராஜா படத்திற்கு பின் மக்களால் பெரிதாக இந்த காம்போ கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், சுந்தர்.சி மற்றும் விஷால் ஆகியோர் மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, பென்ஸ் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த அருண் இப்படத்தை தயாரிக்க உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முடிவடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.