காசாவில் பெரும் வன்முறை – இஸ்ரேலின் கொள்கையை எதிர்க்கும் ட்ரம்ப்
மத்திய காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் மூன்று பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக மேற்கு காசா நகரில் குடியிருப்பு கட்டிடமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் நான்கு பலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள், குடியேறிகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள், கைதிகள் மற்றும் ஆட்சிமுறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் உலகளாவிய விமர்சனங்களைத் தூண்டும் நிலையில், அமெரிக்க மு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதை எதிர்க்கிறார்.
இதேவேளை, 40 பேர் கொண்ட ஆறாவது குழு ரஃபா கடவை வழியாக காசா பகுதியை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 72,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன்
171,666 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





