இராணுவ வீரர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்!
பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை நகரமான ஜெனினில் இராணுவ நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை தங்கள் ஜீப்பின் பானட்டில் கட்டி இஸ்ரேலிய படையினர் குழுவொன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.
ஒரு சந்தேக நபராக இருந்தாலும் கூட, காயமடைந்த நபருக்கு செய்ததை மன்னிப்பதில்லை என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





