உலகம்

ஹார்முஸ் நீரிணையை இரும்புப்பிடியில் வைத்திருந்த டங்சிரி கொல்லப்பட்டார் – இஸ்ரேல் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை முடக்கிய தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்படுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவை வழிநடத்திய டங்சிரி, பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹர்முஸ் நீரிணையை மூடும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பு டங்சிரியிடம் இருந்தது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் குறித்து ஈரான் தரப்பில் இருந்து கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடந்த 20 நாட்களாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் நீரிணையை தனது இரும்பு பிடிக்குள் அலிரேசா டங்சிரி வைத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸை முடியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் வழியாகவே பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டுச் செல்லப்படுகின்றது.

குறித்தப் பகுதி மூடப்பட்டதால் உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச அளவிலும் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்து வருகிறது.

இந்தப் பின்னணியிலேயே, ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் வைத்திருந்த டங்சிரி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தெற்கு ஈரானின் புஷேர் மாகாணத்தில் பிறந்த டங்சிரி, ஈரான்-ஈராக் போர் மற்றும் 1980களில் அமெரிக்கா ஈரானுடன் நடத்திய முதல் மோதலான டேங்கர் போர்கள் என்று அழைக்கப்படும் போர்களில் பணியாற்றினார்.

பின்னர், ஐ.ஆர்.ஜி.சி கடற்படையில் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார்.

தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, பந்தர் அப்பாஸில் உள்ள ஐ.ஆர்.ஜி.சி கடற்படையின் முதலாவது கடற்படை மாவட்டத்திற்குத் தலைமை தாங்கி, 2010 முதல் 2018 வரை துணைத் தளபதியாகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AJ

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!