உலகம்

லெபனானில் இரண்டு கிராமங்களை தாக்கிய இஸ்ரேல்! ஹிஸ்புல்லா குறிவைக்கப்பட்டதா?

லெபனானின் இரண்டு பகுதிகளில் நேற்று இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

கஃபர் டெப்னிட் (Kfar Tebnit) மற்றும் ஐன் கானா (Ain Qana) கிராமங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்களுக்கு முன்பு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) இரண்டு கிராமங்களிலிருந்தும் வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

அப்பகுதிகளில் லெபனான் ஆயுத குழுவின் செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் விதமாக  ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான “இராணுவ உள்கட்டமைப்பை” குறிவைத்து  இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதனை மறுத்துள்ள  ஹிஸ்புல்லா மேற்படி தாக்குதல்கள் பொதுமக்களின் கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலில் நால்வர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த களநிலவரங்களை ஆராய்ந்து வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!