வெனிசுலாவிற்கு (Venezuela) போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா – மதுரோவின் (Maduro) ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சியா?
அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களின் மற்றொரு குழு, வெனிசுலா (Venezuela) நோக்கி புறப்பட்டுச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் கரீபியன் கடலிலும் வெனிசுலாவைச் சுற்றியுள்ள நீரிலும் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய படையை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்நடவடிக்கையானது வெனிசுலா (Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் (Nicolás Maduro) அரசாங்கத்தை வீழ்த்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க இராணுவம், வெனிசுலாவைச் (Venezuela) சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அண்மையில் போதைப்பொருள் இருந்த கப்பல் ஒன்றை குறிவைத்து தாக்கியதும் சுட்டிக்காட்டத்தக்கது.
அமெரிக்கா வெளிப்படையாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக கூறி வருகிறது. இருப்பினும் மறைமுகமாக வெனிசுலாவை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.





