அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?
அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ பேரிடர் காலகட்டத்தில் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவும் வகையிலேயே மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அச்சட்டம் எந்த சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக கையாளப்படவும் இல்லை.
தனது நாடாளுமன்ற உரையின்போது இது பற்றி ஜனாதிபதி தெளிவுபடுத்தி இருந்தார். எனவே , அவசரகால சட்டம் குறித்து முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் ஏற்புடையவை அல்ல.” எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.





