விக்கி – நயன் பிரிவு? ஜோடியாக கொடுத்த தக் லைஃப் ரியாக்ஷன்

சில நாட்களுக்கு முன்பு நயன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டு நீக்கி இருந்தார்.
அதைத்தொடர்ந்து நயன்தாரா தன் காதல் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி மீடியாவில் பரவி வருகிறது. இதனால் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
அதே சமயம் அவர் ஜோதிடரின் பிடியில் இருப்பதாகவும் அதனால் தான் கோவில் கோவிலாக சென்று வருவதாகவும் கூட அரசல் புரசலாக பேசப்பட்டது.
இந்த சூழலில் நயன்தாரா இந்த சர்ச்சை செய்திகளுக்கு தக் லைஃப் ரிப்ளை கொடுத்து இருக்கிறார். தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு போட்டோ வைத்துள்ளார்.
அதில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கன்னத்தில் கை வைத்தபடி எதையோ ஆர்வமாக பார்க்கின்றனர். அந்த போட்டோவில் எங்களைப் பற்றி வெளிவரும் கசப்பான செய்திகளுக்கு இதுதான் எங்களுடைய ரியாக்ஷன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
அதேபோல் வலைப்பேச்சு சேனலில் தான் நயன்தாராவை பற்றி நெகட்டிவ் செய்திகளை அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார்கள். அதனால் இது அவர்களுக்கான பதிலடி என்றும் இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் இது போன்ற நெகட்டிவ் செய்திகள் எல்லாம் நயன்தாராவுக்கு புதுசு கிடையாது. கொஞ்ச நாள் வேடிக்கை பார்த்துவிட்டு அதன் பிறகு பதிலடி கொடுப்பதும் அவருடைய ஸ்டைல் தான்.