KGF, சலார் இயக்குனருடன் இணைகின்றாரா அஜித் குமார்?
அஜித் குமாரின் 62வது படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைத்து உருவாகி வருகிறது. அஜர்பைஜானில் மு ழுக்க முழுக்க படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், வில்லனாக அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் அஜித் குமாரின் அடுத்த படம் தொடர்பான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கேஜிஎஃப் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக ஒரு தகவல் தீயாக பரவியது.
இந்நிலையில், அதுகுறித்த விளக்கத்தை பிரசாந்த் நீல் தரப்பு கூறியுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 3 மற்றும் சலார் 2 படங்களை மட்டுமே இப்போதைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தென்னிந்தியாவில் மற்ற எந்தவொரு முன்னணி நடிகர் படத்தையும் இயக்க அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என அவரது டீம் தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் அஜித் குமாரை பிரசாந்த் நீல் இயக்கப்போவதாக வெளியான தகவல் வெறும் உருட்டு மட்டுமே என்று கூறுகின்றனர்.