தொப்புள் கொடி சர்ச்சை… மருத்துவம் செய்ய தடை விதித்து அதிரடி உத்தரவு
தமிழகத்தின் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் இர்பான். இவர் தனது யூடியூப் சேனல்களில் உணவு தொடர்பான வீடியோ பதிவிட்டு வந்த நிலையில் தற்போது தனது திருமணம், வீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் துபாய் சென்றபோது, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவமனையில் சோதித்து, அதனையும் யூடியூபில் வீடியோவாக வெளியிட்டார். இந்த விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கம் கேட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார் இர்பான். இதனால் அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை கைவிட்டது. இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்து, குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது .அரசு பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்குக்குள் செல்ல வேண்டும். மேலும் கத்தரிக்கோல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மட்டுமே கையாள வேண்டும். ஆனால் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டியது சட்டப்படி தவறு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை, ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.