அயர்லாந்துக்கு 164 வெற்றியிலக்கு
ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது (8) இடம்பெற்று வரும் நிலையில் அயர்லாந்து அணிக்கு 164 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.





