ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு!
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்துள்ளதை அந்நாட்டின் அரச தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டிணைந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உச்சத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானின் நகர மையத்தில் உள்ள அவரது வளாகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் 40 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானியர்கள் தங்கள் நாட்டை “மீண்டும் கைப்பற்ற” “மிகப்பெரிய வாய்ப்பை” வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது ஈரானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





