மங்களூருக்கு வரும் ஈரானிய எல்பிஜி – இந்தியா மீண்டும் ஈரானுடன் வியாபாரம்
அமெரிக்காவின் தற்காலிக தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஈரானிய எல்பிஜி பொருட்களை கொள்வனவு செய்துள்ளது
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்தது.
2019 இல், மேற்கத்திய தடைகள் காரணமாக இந்தியா ஈரானிடமிருந்து எரிசக்தி கொள்வனவு செய்வதை
நிறுத்தியிருந்தது.
இந்த எல்பிஜி பொருட்கள், ‘அரோரா’ என்ற கப்பலில் இந்தியாவின் மங்களூர் மேற்குக் கடற்கரைத் துறைமுகத்திற்கு வரவிருக்கிறது.
எரிபொருள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும்.
ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் தடைபட்டதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.




