ஜப்பான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி?
ஹார்முஸ் நீரிணை வழியாக ஜப்பான் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பில் ஈரான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் பேச்சுகள் தொடங்கியுள்ளன.
ஜப்பானுக்காக தற்போது நிலவும் போக்குவரத்துத் தடையைத் தற்காலிகமாக நீக்கத் தயாராக இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார்.
நேரடிப் பேச்சுகள் பலனளிக்கும் என ஜப்பான் கருதினாலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவைத் தூண்டாமல் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட அந்நாட்டு அதிகாரிகள் விரும்புகின்றனர்.
ஈரானின் இந்த அறிவிப்பு எரிசக்தி நெருக்கடிக்கு முழுமையான தீர்வாக அமையாது என்பதால், அவர்களின் உண்மையான நோக்கத்தை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று ஜப்பான் தரப்பில் கூறப்படுகிறது.
ஜப்பான் தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்தச் சூழலை மிகவும் நிதானமாக அணுகி வருகிறது.





